தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து

மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து

மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து


ADDED : ஏப் 28, 2025 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2025 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மும்பை : மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையின் பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் கைசர் ஐ ஹிந்த் கட்டடம் உள்ளது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கட்டடத்தின் நான்காவது தளத்தில் அமலாக்க துறையின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில், நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர், நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

எனினும், அமலாக்க துறை அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், மேஜைகள், மின் சாதனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us