உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 07, 2026 08:38 PM
ADDED : அக் 07, 2026 02:14 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: போர்கார் தொழிற்பேட்டை பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு பிளாஸ்டிக் ஆலைகளில் தீ விபத்து ஏற்பட்டது.
டில்லி, போர்கார் தொழிற்பேட்டை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை உற்பத்தி செய்யும் ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. நேற்று அதிகாலையில், ஒரு பிளாஸ்டிக் ஆலையில் திடீரென தீப் பற்றியது. அருகில் இருந்த இன்னொரு பிளாஸ்டிக் ஆலையிலும் தீ பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். 16 தீயணைப்பு வண்டிகள், தீணை அணைக்க பேராடின. இருந்தில் நேற்று காலை 6:15 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. பிளாஸ்டிக் ஆலைகளின் மொட்டை மாடிகளில் இருந்து தீ பரவியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
