உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 16, 2026 05:30 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: தென்மேற்கு டில்லியின், கால்காஜியில் உள்ள ஒரு தனியார் நிறுவன கட்டடத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று காலை 10.30 மணியளவில், இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு எட்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. உடனடியாக தீ அணைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
