தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ராஜ்தானி ரயிலில் தீ: 68 பேர் உயிர் தப்பினர்

 ராஜ்தானி ரயிலில் தீ: 68 பேர் உயிர் தப்பினர்

 ராஜ்தானி ரயிலில் தீ: 68 பேர் உயிர் தப்பினர்


ADDED : மே 18, 2026 12:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2026 12:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரத்லம்: மத்திய பிரதேசத்தில், டில்லி நோக்கி சென்ற ராஜ்தானி விரைவு ரயிலின் 'ஏசி' பெட்டியில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த பெட்டியில் இருந்த 68 பயணியரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கேரளாவின் திரு வனந்தபுரத்தில் இருந்து டில்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையத்திற்கு ராஜ்தானி விரைவு ரயில் நேற்று முன்தினம் புறப்பட்டது.

இந்த ரயில், நேற்று காலை 5:15 மணிக்கு மத்திய பிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் விக்ரம்கர் அலோட் மற்றும் லுானி ரிச்சா ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 'பி - 1' என்ற ஏசி பெட்டியில் திடீரென தீப்பற்றியது.

காற்றின் வேகம் காரணமாக, அடுத்ததாக இருந்த பொருட்கள் வைக்கும் பெட்டி, பயணியர் பெட்டிகளுக்கும் தீ மளமளவென பரவியது.

கரும்புகை வெளியேறியதை அறிந்த பயணியர் உடனே ரயிலை நிறுத்தினர். அந்தப் பெட்டியில் இருந்த 68 பயணியரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர்.

இதனால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக, தீ விபத்துக்குள்ளான மூன்று பெட்டிகள், மற்ற பெட்டிகளில் இருந்து துண்டிக்கப்பட்டன.

இதுதவிர, ரயில் பாதையின் மேல் பகுதியில் செல்லும் மின் வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே, அந்த ரயில் பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமாகின.

இதை தொடர்ந்து, கீழே இறக்கப்பட்ட பயணியரை, மற்ற பெட்டிகளில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன்பின், அந்த ரயில் நேற்று காலை 9:45 மணிக்கு தன் பயணத்தை மீண்டும் தொடங்கியது. அதன்பின், ராஜஸ்தானின் கோட்டா ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பயணியருக்காக, அதே ரயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்பட்டு, டில்லிக்கு நேற்று மதியம் 12:30 மணிக்கு சென்றடைந்தது.

இந்த தீ விபத்தின் காரணமாக, அந்த வழித்தடத்தில் 18 ரயில்களின் வருகை தாமதமானது. சில ரயில்கள், பல்வேறு ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால், ஏராளமான பயணியர் கடும் அவதிக்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us