தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/திருச்சூரில் பட்டாசு விபத்து: 13 பேர் பலி

திருச்சூரில் பட்டாசு விபத்து: 13 பேர் பலி

திருச்சூரில் பட்டாசு விபத்து: 13 பேர் பலி


UPDATED : ஏப் 21, 2026 10:21 PM

ADDED : ஏப் 21, 2026 07:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 21, 2026 10:21 PM ADDED : ஏப் 21, 2026 07:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருச்சூர்: திருச்சூர் பூரம் விழாவிற்காக தயாரிக்கப்பட்ட பட்டாசு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

கேரளாவில் பிரபலமான திருச்சூர் பூரம் பண்டிகைக்காக, திருவம்பாடி தேவசம்போர்டுக்காக , தலப்பள்ளி தாலுகாவில் உள்ள முண்டதிகோடு என்ற இடத்தில் குடோன் ஒன்றில் பட்டாசுகள் வைக்கப்பட்டு இருந்தன. இன்று மதியம் இங்கு ஏற்பட்ட வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த மாநில பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் இருந்த பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து வருவதால் மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலிஎண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

தலைவர்கள் இரங்கல்

ஜனாதிபதி திரவுபதி முர்மு

திருச்சூரில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது கவலை அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பம் நினைவாக எனது எண்ணம் உள்ளது. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும்.

பிரதமர் மோடி


திருச்சூரில் உள்ள பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலர் உயிரிழந்த செய்தி அறிந்து வேதனை அளிந்தேன். தங்களது நெருக்கமான உறவினர்களை இழந்து வாடுபவர்களின் வேதனையை உணர்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

காங்கிரஸ் எம்பி ராகுல்

பூரம் திருவிழாவிற்கு முன்பு, திருச்சூரில் உள்ள பட்டாசு கிடங்கில் விபத்த ஏற்பட்டது கவலை அளிக்கிறது. இதில் உயிரிழப்பு மற்றும் அதிக இழப்பு ஏற்பட்டது மனதை நொறுங்க செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது மனம் உள்ளது. உடனடியாக மீட்புபணியை துவக்குவதிலும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை கிடைப்பதையும் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.

கேரள கவர்னர், முதல்வர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us