உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : அக் 30, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், தீயணைப்பு வீரர் காயம் அடைந்தார்.
வடமேற்கு டில்லி, ஜஹாங்கிர்புரியில் ஒரு வீட்டில் இன்று (அக்.,30) காலை, 11:00 மணிக்கு காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியது. தகவல் அறிந்து, மூன்று வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், தீயணைப்பு வீரருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விசாரணை நடக்கிறது.
