ஒடிசா: கோயில் விழாவில் பட்டாசு விபத்து: 20 பேருக்கு தீக்காயம்
ஒடிசா: கோயில் விழாவில் பட்டாசு விபத்து: 20 பேருக்கு தீக்காயம்
ADDED : மே 30, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புரி: ஒடிசாவில் புரி ஜெகந்நாதர் கோயி்ல் திருவிழாவில் பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. பலர் தீக்காயமடைந்தனர். ஒடிசாவின் புரியில் பிரசித்தி பெற்ற ஜெகந்நாதர் கோயில் சந்தன் ஜாத்ரா திருவிழா கோலாகலாமா துவங்கியது.
விழாவில் பட்டாசு வெடிக்கப்பட்டபோது எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் தீக் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.