கால்பந்து போட்டியின் போது வெடித்த பட்டாசு; கேரளாவில் 30 பேர் படுகாயம்
கால்பந்து போட்டியின் போது வெடித்த பட்டாசு; கேரளாவில் 30 பேர் படுகாயம்
ADDED : பிப் 19, 2025 08:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: கேரளாவில் கால்பந்து திடலில் வெடித்த, பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்ததில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அரீகோடு பகுதியில் நெல்லிகுத் மற்றும் மாவூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. இறுதிப்போட்டி என்பதால், போட்டி துவங்குவதற்கு முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
அப்போது, திடலில் வெடித்த, பட்டாசு பார்வையாளர்கள் கூடத்தில் சிதறி விழுந்தது. பார்வையாளர்கள் உடனே ஓட்டம் பிடித்தனர். இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடைசி நேரத்தில் வெடித்த பட்டாசுகள் காரணமாக, போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

