எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!
எக்ஸ்பிரஸ் ரயில் மீது துப்பாக்கிச்சூடு; ஒடிசாவில் அதிர்ச்சி!
ADDED : நவ 05, 2024 07:36 PM

புரி: ஒடிசா மாநிலத்தின் பத்ரக் அருகே இன்று சென்று கொண்டிருந்த புரி-ஆனந்த் விகார் நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம் பற்றி ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று காலை 9 மணியிலிருந்து 9.30 மணிக்குள் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரயில் பத்ரக்கை கடந்து சென்றபோது நடந்திருக்கிறது.
சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார், உடன் நாங்களும் விரைந்து சென்று பயணிகளை உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றினோம். நல்வாய்ப்பாக, யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.சம்பவம் குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என்றனர்.
ரயில்வே கார்டு மகேந்திரா பெஹரா கூறுகையில், 'நான் சிக்னல் மாற்றும் போது, பத்ரக் மற்றும் பவுத்புர் ரயில்வே நிலையத்திற்கு இடையே ரயில் சென்றுகொண்டிருந்தது. அப்போது ஒருவன் துப்பாக்கியால், ரயில் மீது இரு முறை சுட்டான். நான் உடனடியாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்தேன். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இவ்வாறு பெஹரா கூறினார்.