இந்தியாவில் முதல் முறை; 1-பி வகை குரங்கு அம்மை கேரளாவில் பாதிப்பு!
இந்தியாவில் முதல் முறை; 1-பி வகை குரங்கு அம்மை கேரளாவில் பாதிப்பு!
ADDED : செப் 23, 2024 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலப்புரம்: குரங்கு அம்மையின் கடுமையான திரிபு வகையான 1-பி வைரஸ், இந்தியாவில் முதல் முறையாக கேரளா, மலப்புரத்தில் 38 வயதான ஒருவருக்கு தாக்கியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டிலிருந்து சமீபத்தில் வந்த அவர், கேரளாவின் எடவன்னா பகுதியை சேர்ந்தவர். உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததிலிருந்து இந்தியாவில் 30 பேர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் 29 பேரும், 2பி எனப்படும் லேசான பாதிப்பு கொண்ட வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள்.இவர் ஒருவர் மட்டுமே கடுமையான பாதிப்பு கொண்ட 1பி வைரஸ் பாதிப்பு கொண்டவர் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.