இமாச்சலில் நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் காங்., அரசு தவிப்பு
இமாச்சலில் நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் காங்., அரசு தவிப்பு
ADDED : செப் 03, 2024 07:32 PM

சிம்லா:அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் வரவேண்டி ய சம்பளம் வரவில்லை, மாநில வரலாற்றிலேயே முதன் முறையாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக காரணம் கூறப்படுகிறது.
இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு உள்ளார். இங்கு முன்னதாக ஆட்சி செய்து வந்த பா.ஜ.,வை தோற்கடித்து காங்.,ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் தர வேண்டிய சம்பளம் தேதி மூன்று ஆன பின்னரும் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.
மேலும் நிதி நெருக்கடி காரணமாக மாநில முதல்வர் மற்றும் தலைமை செயலக அதிகாரிகள் ஆகியோர் தங்களது சம்பளத்தை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க உள்ளதாக அறிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மாநில எதிர்கட்சி தலைவர் ஜெய்ராம் தாக்கூர் கூறியதாவது: அரசு இப்பிரச்னையை உரிய தீவிரத்துடன் நடத்த வி்ல்லை. முதல்வர் சில சமயம் பொருளாதா நெருக்கடி என்றும், சில நேரம் இல்லை என்றும் கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் அளித்த பொய்யான வாக்குறுதியால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை மற்ற மாநிலங்களும் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும். என்றார்.