ADDED : ஜன 30, 2025 07:10 AM

பெங்களூரு; கர்நாடக மீன் வளம் மேம்பாட்டு ஆணைய தலைவராக அரவிந்த் மைசூரு போட்டியின்றி தேர்வானார்.
மீன் வளத்துறை வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக மாநில மீன்வள மேம்பாட்டு ஆணையம், மாநில அளவிலான கூட்டுறவு அமைப்பாகும். இந்த ஆணையம், மீன் பிடி தொழில் முன்னேற்றம், மீனவர்களின் நலனுக்காக செயல்படுகிறது. ஆணைய தலைவர் பதவிக்கு, நேற்று (முன்தினம்) தேர்தல் நடந்தது. இதில் அரவிந்த் மைசூரு, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மாண்டியா, மலவள்ளியின், சிக்கமளிகே கொப்பலு கிராமத்தை சேர்ந்த நஞ்சேகவுடாவின் மகனான அரவிந்த் மைசூரு எம்.பி.ஏ., பட்டதாரி. மாண்டியா மாவட்ட மீனவர்கள் மேம்பாட்டு அமைப்பு, மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் இயக்குனராக பணியாற்றுகிறார். தோட்ட விளைச்சல்கள், சந்தன உற்பத்தியில் வெற்றி கண்டவர். இவருக்கு மீன்பிடி துறையிலும் அனுபவம் உள்ளது. இவரது பதவி காலம், ஐந்து ஆண்டுகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

