வேட்பாளர்களின் உடற்தகுதி சான்று: இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
வேட்பாளர்களின் உடற்தகுதி சான்று: இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
ADDED : பிப் 15, 2024 02:45 PM

சென்னை: வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? என இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதி விளக்கமளிக்க சென்னை உயிர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையுடன் வேட்பு மனுவிற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(பிப்.,15) விசாரணைக்கு வந்தது.
அப்போது, '' வேட்பாளர்களின் உடல் நிலை பரிசோதனை அறிக்கை, சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விஷயம். சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்'' என தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள், '' மக்கள் கடமையாற்றுவதற்கான உடற்தகுதியை வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்களா என்பது குறித்து சான்று பெறலாம். இதனால் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்றை சமர்ப்பிக்க வலியுறுத்த முடியுமா? என இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

