ADDED : ஏப் 16, 2025 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வடக்கு டில்லியின் புறநகர் பகுதியில் 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
வடக்கு டில்லியின் புறநகர்ப் பகுதியில் மூன்று தனித்தனி நடவடிக்கைகளில் ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
சாஹிபுல், ஜதீன், 19, அருண், 20, ரவீந்தர், 40, பரூக், 35, ஆகிய ஐந்து பேரிடம் இருந்து 1.25 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள 620 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப்பொருள் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.