தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ போலி ஆவணம் தயாரித்து உடல் உறுப்பு தானம்: கேரளாவில் ஐந்து பேர் அதிரடி கைது

 போலி ஆவணம் தயாரித்து உடல் உறுப்பு தானம்: கேரளாவில் ஐந்து பேர் அதிரடி கைது

 போலி ஆவணம் தயாரித்து உடல் உறுப்பு தானம்: கேரளாவில் ஐந்து பேர் அதிரடி கைது


ADDED : மே 10, 2026 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 10, 2026 01:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொச்சி: உடல் உறுப்புகள் தானம் செய்யும் விவகாரத்தில், போலி ஆவணங்கள் தயாரித்த கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை கேரள போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.

உடல் உறுப்புகள் தானம் செய்யும் போது, தானம் செய்பவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் இடையிலான நடைமுறையில், போலீசார், உள்ளாட்சி அமைப்பினர், டாக்டர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி., ஆகியோரிடம் இருந்து சான்றிதழ் பெறுவது அவசியம்.

இந்த சூழலை பயன்படுத்தி, கேரளாவைச் சேர்ந்த கும்பல் ஒன்று, போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தது தற்போது அம்பலமாகி உள்ளது.

எர்ணாகுளம் மற்றும் கொல்லம் மாவட் டத்தில் உடல் உறுப்பு தான நடைமுறையின் போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானது என தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இ தன் தொடர்ச்சியாக, போலி ஆவணங்கள் தயாரித்த கும்பலைச் சேர்ந்த மொரக்கலா பகுதியைச் சேர்ந்த சன்னி வர்கீஸ், 56, அவரது மனைவி சினி, 50, செல்லாக்குளம் பகுதியைச் சேர்ந்த சனோஜ், 32, ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர் .

கொல்லம் மாவட்டம் கிளிகொல்லுாரைச் சேர்ந்த சுதீர், ஸ்ரீஜா ஆகியோரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:

எர்ணாகுளம், கொச்சி மாவட்டங்களில் போலி ஆவணங்கள் தயாரிக்கும் கும்பல் 2023, ஆக., முதல் செயல்பட்டு வந்தது.

இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள், கொச்சியில் உள்ள இரு தனியார் மருத்துவமனைகளின் லெட்டர்பேட் மற்றும் போலீசார் வழங்கும் தடையில்லா சான்றிதழ்களை போலியாக தயாரித்து உடல் உறுப்பு தானம் செய்வோருக்கு வழங்கிஉள்ளனர்.

உடுமா எம்.எல்.ஏ., குஞ்சம்பு, எர்ணா குளம் எம்.பி., ஹிபி ஈடன், ஆலத்துார் எம்.பி., ராதாகிருஷ்ணன், கூத்துப்பறம்பா முன்னாள் எம்.எல்.ஏ., மோகனன், அரூர் முன்னாள் எம்.எல்.ஏ., தலீமா ஜோஜோ, கேரள அரசின் முன்னாள் தலைமை கொறடா ஜெயராஜ் உள்ளிட்டோரின் பெயரில் போலி கடிதங்களும் தயார் செய்யப்பட்டு ள்ளன.

பல முன்னணி டாக்டர்களின் போலி பரிந்துரை கடிதங்களையும் இந்த கும்பல் தயார் செய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us