ADDED : செப் 19, 2024 10:30 PM
புதுடில்லி:இருவேறு நடவடிக்கைகளில் செல்போன் கொள்ளையர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 150 போன்கள் மீட்கப்பட்டுள்ளன.
ரோகிணியைச் சேர்ந்த பியூஷ், 24, மயங்க், 20, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
முதலில் சிக்கிய பியூஷ் கொடுத்த தகவலின் பேரில், மயங்க் கைது செய்யப்பட்டார். தான் திருடிய மொபைல் போன்களை மயங்க் வாயிலாக பியூஷ் விற்றுள்ளார்.
நேபாளம், வங்கதேசம் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் திருடப்பட்ட செல்போன்களை விற்றது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து 76 மொபைல் போன்கள் மீட்கப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில் வடகிழக்கு டில்லியின் சாஸ்திரி பார்க் பகுதியில் இருந்து மொபைல் பறிப்பு கும்பலைச் சேர்ந்த அமன், 22, ஆப்தாப், 22, ஹர்ஜீத் சிங், 29, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 77 மொபைல் போன்கள் மற்றும் லேப்டாப் மீட்கப்பட்டன.
இந்த கும்பல், டில்லி - என்.சி.,ஆரில் மொபைல் போன்களைத் திருடி, பின்னர் நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட பிற பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர்.