நச்சு வாயுவை சுவாசித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
நச்சு வாயுவை சுவாசித்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
ADDED : ஜன 07, 2025 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர் :   ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் அகமது பட். இவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்தார்.
இந்நிலையில், தன் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறி, உரியில் உள்ள அகமதுவின் தாய், ஸ்ரீநகரில் உள்ள வீட்டின் உரிமையாளர் முக்தாரிடம் தெரிவித்தார். அகமதுவின் வீட்டிற்கு அவர் சென்று பார்த்தபோது, அனைவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஐந்து பேரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், குளிருக்காக வைக்கப்பட்ட ஹீட்டரில் இருந்து வெளியேறிய 'கார்பன் மோனாக்சைடு' என்ற நச்சு வாயுவை சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது.

