தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ படிப்படியாக துவங்கும் விமான இயக்கம் துபாய், அபுதாபியில் சேவைகள் ஆரம்பம்

 படிப்படியாக துவங்கும் விமான இயக்கம் துபாய், அபுதாபியில் சேவைகள் ஆரம்பம்

 படிப்படியாக துவங்கும் விமான இயக்கம் துபாய், அபுதாபியில் சேவைகள் ஆரம்பம்


ADDED : மார் 03, 2026 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 02:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: போர் பதற்றம் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த சில நாட்களாக தடைப்பட்ட விமான சேவை படிப்படியாக இயங்கத் துவங்கி உள்ளன. முதற்கட்டமாக, துபாய், அபுதாபி நகரங்களில் இருந்து குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவுடனான மோதலை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி நகரங்கள் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தின. இதில், அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டது.

குறைந்த அளவு இதையடுத்து, துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் விமான சேவை உடனடியாக நிறுத்தப்பட்டது.

போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் வான் பகுதி பகுதியளவு மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

'எமிரேட்ஸ், ஏர் இந்தியா, இண்டிகோ' உள்ளிட்ட நிறுவனங்களும் முன்னெச்சரிக்கை காரணமாக விமான சேவைகளை நிறுத்தின.

இதனால், துபாய் சர்வதேச விமான நிலையத்திலும், அபுதாபி விமான நிலையத்திலும் லட்சக்கணக்கான பயணியர், ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பயணியரின் நிலையை கருத்தில் கொண்டு நேற்று முதல் படிப்படியாக விமான சேவையை ஒரு சில நிறுவனங்கள் துவங்கிஉள்ளன.

இது குறித்து, 'பிளைதுபாய்' விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏற்கனவே பதிவு செய்து காத்திருக்கும் பயணியரின் வசதிக்காக குறைந்த அளவு விமானங்கள் இயக்கப்படுகின்றன.

'பயணியர் தங்கள் பயணம் தொடர்பான விபரங்களை எங்கள் இணையதளம் வாயிலாக தெரிந்து கொண்டு விமான நிலையம் வர அறிவுறுத்தப்படு கின்றனர்' என, தெரிவித்து உ ள்ளது.

எமிரேட்ஸ் விமான நிறுவனமும் நேற்று மாலை முதல் விமான சேவையை துவங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

இதையடுத்து, துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் விமான சேவை படிப்படியாக துவங்கியது.

இதற்கிடையே, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் இன்று முதல் டில்லி, கொச்சி, கோழிக்கோடு, மங்களூரு, மும்பை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விமான சேவை துவங்கும் என அறிவித்துள்ளது.

சிறப்பு விமானங்கள் முதல் விமானம் மஸ்கட்டில் இருந்து திருச்சிக்கு இன்று காலை 10:25 மணிக்கு புறப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா நாடுகளுக்கான சேவை இன்று மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வர வசதியாக, அங்குள்ள ஜெட்டா நகரில் இருந்து 10 சிறப்பு விமானங்களை இண்டிகோ நிறுவனம் இன்று இயக்கவுள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹைதராபாத், மும்பை, டில்லி, ஆமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இந்த விமானங்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us