ADDED : மார் 04, 2026 03:01 AM

புதுடில்லிஎன்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் சார்பில், டில்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் இரண்டு நாள், மலர் கண்காட்சியை முதல்வர் ரேகா குப்தா நேற்று துவக்கி வைத்தார்.
கன்னாட் பிளேஸ் பகுதியின் சென்ட்ரல் பார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சியை துவக்கி வைத்து, டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
முன்னர் எல்லாம், துலிப் மலர்களை போட்டோ எடுக்க வேண்டும் என்றால், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு தான் செல்ல வேண்டும். ஆனால், இப்போது, என்.டி.எம்.சி., ஏற்பாட்டில், மத்திய டில்லியிலேயே துலிப் மலர்கள் உள்ளிட்ட மலர் கண்காட்சி துவக்கப்பட்டுள்ளது. இங்கேயே அழகிய முறையில் துலிப் மலர்களை படம் எடுக்கலாம்.
டில்லியின் பசுமைப்பரப்பு மற்றும் மலர்களின் வனப்பை உலகிற்கு பறை சாற்றிய என்.டி.எம்.சி., அதிகாரிகளை பாராட்டுகிறேன். தேவைப்பட்டால், என்.டி.எம்.சி., அதிகாரிகளின் உதவியை, குறைந்த இடத்தில் மலர் கண்காட்சிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து, டில்லி மாநில அதிகாரிகள் பெற உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
