குடும்ப அரசியலை குறை சொல்வது இருக்கட்டும்; பாதுகாப்பை பலப்படுத்துங்க: சொல்கிறார் உமர் அப்துல்லா
குடும்ப அரசியலை குறை சொல்வது இருக்கட்டும்; பாதுகாப்பை பலப்படுத்துங்க: சொல்கிறார் உமர் அப்துல்லா
ADDED : செப் 15, 2024 06:26 AM

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு மோசமாக உள்ளது. முதலில் அதை சரி செய்துவிட்டு, பிறகு குடும்ப அரசியல் பற்றி பேசுங்க' என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
காஷ்மீரை, குடும்ப அரசியல் நடத்தும் 3 அரசியல் குடும்பங்கள், சேர்ந்து வாரிசு அரசியல் நடத்தி சீரழித்து விட்டது என பிரதமர் மோடி குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக உமர் அப்துல்லா அளித்த பேட்டி: குடும்ப கட்சிகளுடன் பிரதமர் மோடிக்கு கூட்டணிக்கு அமைக்கும் போது தயவு தேவைப்படுகிறது. அப்போது அவர்கள் வாரிசு அரசியல் செய்வது குறித்து பா.ஜ.,வுக்கு எந்த கவலையும் இல்லை.
பாதுகாப்பு
மக்கள் ஜனநாயக கட்சியுடன் பா.ஜ., கூட்டணி வைத்திருந்தபோது, அவர்கள் தவறுகள் செய்தது பா.ஜ.,வுக்கு தெரியவில்லையா? கிஷ்த்வார் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து பிரதமர் மோடி மவுனம் ஏன்? மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. முதலில் அதை சரி செய்துவிட்டு, பிறகு குடும்ப அரசியல் பற்றி பேசட்டும். பாதுகாப்பை பலப்படுத்துவதில், பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.