‛‛அனைவருக்கும், அனைத்தும்'' : டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி
‛‛அனைவருக்கும், அனைத்தும்'' : டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசு ஊர்தி
ADDED : ஜன 05, 2024 09:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழா பேரணியில் இடம் பெறும் தமிழக அரசின் அலங்கார ஊர்தியில் ‛‛அனைவருக்கும், அனைத்தும்'' என்ற வாசகம் இடம் பெறுகிறது.
வரும் 26-ம் தேதி குடியரசு தினவிழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் டில்லியில் நடைபெறும் பிரம்மாண்ட பேரணியில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம்.
இந்தாண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறது. இதன் மனு நீதி சோழனின் குடவோலைமுறையை விளக்கும் அலங்கார ஊர்தியும், உத்திரமேரூர் கல்வெட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, ‛‛அனைவருக்கும், அனைத்தும்'' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.