தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/வெளிநாட்டு சதி!

வெளிநாட்டு சதி!

வெளிநாட்டு சதி!


UPDATED : நவ 03, 2026 12:00 AM

ADDED : நவ 02, 2026 08:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2026 12:00 AM ADDED : நவ 02, 2026 08:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வெளிநாட்டு சதி!


ராகுல் காந்தியை பயன்படுத்தி, நாட்டில் குழப்பத்தையும் நிலையற்ற தன்மையையும் ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. அரசியல் சாசனத்தின்படிதான் ஆட்சி நடக்கிறது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தலில் தோற்றால் மட்டுமே தேர்தல் கமிஷன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டுகின்றனர்
- நிதின் நபின்
தேசிய தலைவர், பா.ஜ.,



தீபாவளி வாய்ப்பு!


அயோத்தியில் ஏற்றப்படும் ஒவ்வொரு தீபமும் மண்பாண்டத் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அவர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கும் புதிய வெளிச்சம் தருகிறது. பா.ஜ., ஆட்சிக்கு முன் உள்ளூர் கைவினைக் கலைஞர்கள், விவசாயிகள், சிறு வணிகர்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை.
- யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,



வெளிநாட்டு உதவி!


வெளிநாட்டு உதவியால்தான் மோடி பிரதமரானார். தொடர்ந்து அந்த பதவியில் நீடிக்கவும் வெளிநாட்டு உதவியே காரணம். அவரது நிதி அமைப்பு முழுமையாக வெளிநாட்டினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு சமூக வலைதளங்களும் மோடிக்கு ஆதரவாக உள்ளன. இது பற்றி பகிரங்க விவாதம் நடத்த தயார்.
- ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us