தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ வெளிநாட்டு பங்களிப்பு மசோதா: பார்லி அலுவல் பட்டியலில் 'மிஸ்ஸிங்'

வெளிநாட்டு பங்களிப்பு மசோதா: பார்லி அலுவல் பட்டியலில் 'மிஸ்ஸிங்'

வெளிநாட்டு பங்களிப்பு மசோதா: பார்லி அலுவல் பட்டியலில் 'மிஸ்ஸிங்'


UPDATED : ஆக 08, 2026 08:41 PM

ADDED : ஆக 08, 2026 08:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2026 08:41 PM ADDED : ஆக 08, 2026 08:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி வாரம் நாளை தொடங்கவுள்ள நிலையில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை அலுவல் பட்டியலில் இடம்பெறவில்லை.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ல் தொடங்கியது. வரும் 13 வரை நடக்கிறது. இதில், 'நீட்' வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி, காங்., - திரிணமுல் காங்., - சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய, 'இண்டி' கூட்டணி அமளியில் ஈடுபட்டு வருகிறது. இதனால், எந்த அலுவல்களுமின்றி லோக்சபா, ராஜ்யசபா தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.

பொதுத்தேர்வுகள் முறைகேடு தடுப்பு திருத்த மசோதா மீது மட்டுமே இரு சபைகளிலும் விவாதம் நடந்தது. மற்றபடி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா உட்பட பல மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேறின.

இந்த பரபரப்பான சூழலில், கூட்டத்தொடரின் கடைசி வாரம் நாளை தொடங்குகிறது. இதற்கான அலுவல் பட்டியலில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதா, தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா, கேரளா பெயர் மாற்ற மசோதா, தேசிய கூட்டுறவு வளர்ச்சி கார்ப்பரேஷன் திருத்த மசோதா ஆகியவை மட்டுமே பட்டியலிடப்பட்டு உள்ளன.

அதே சமயம், எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவை பட்டியலிடப்படவில்லை. எனினும், இந்த இரு மசோதாக்களை மத்திய அரசு திடீரென கொண்டு வரலாம் என்பதால், சபைக்கு தவறாமல் வரும்படி காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தங்களது எம்.பி.,க்களுக்கு அறிவுறுத்தி உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us