ADDED : ஜூலை 12, 2025 01:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே கல்லார் பிளாமலை பகுதியில் ஏலத்தோட்டத்தினுள் 40 வயதுடைய பெண் காட்டு யானை உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
அதற்கு பார்வை குறைவு, கேள்வி ஞானம் இல்லை என வனத்துறையினர் நடத்திய முதல் கட்ட பரிசோதனையில் தெரியவந்தது.
அடிமாலி வனத்துறை அலுவலகத்தை சேர்ந்த இரு வனக்காவலர்கள் யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தேக்கடியைச் சேர்ந்த வனத்துறை கால்நடை டாக்டர்கள் யானையை பரிசோதித்து சிகிச்சை அளிப்பார்கள் என அடிமாலி வனத்துறை அதிகாரி ராஜன் தெரிவித்தார்.