டில்லி மாநில பசுமை பரப்பு அதிகரிக்க வனத்துறை திட்டம்
டில்லி மாநில பசுமை பரப்பு அதிகரிக்க வனத்துறை திட்டம்
ADDED : மார் 18, 2026 01:42 AM

புதுடில்லி,
நடப்பு ஆண்டில், டில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புதிதாக, 70.82 லட்சம் மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டமிட்டுள்ளது. மேலும், சூரிய வெளிச்சம் மரங்கள் வழியாக நிலத்தில் விழும் வகையில், புதிய திட்டத்தையும், வனத்துறை பின்பற்ற உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:
வனத்துறையினரின், பிப்ரவரி மாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் படி, புதிதாக, கனோபி ஓப்பனிங் முறை என்ற புதிய முறை பின்பற்றப்பட உள்ளது.
இதனால், அடர்ந்த வனங்களில் வளரும் மரங்களின் கிளைகளை வெட்டி, சீர் படுத்தி, அந்த இடைவெளி வழியாக சூரிய வெளிச்சம் தரையில் விழுமாறு செய்ய உள்ளோம்.
மேலும், மூன்று மட்டத்திலான நடவு முறையையும் பின்பற்ற உள்ளோம். அதன்படி, வளர்ந்த நாட்டு மரங்கள், சிறிய மரங்கள், குத்துச்செடிகள் என பிரித்து, நடவு செய்யப்பட உள்ளோம்.
அந்த வகையில், நடப்பு நிதியாண்டில், 70.82 லட்சம் மரக்கன்றுகளை இவ்வாறு நடவுள்ளோம். இதன் மூலம், டில்லி நகரின் பசுமைப்பரப்பை அதிகரிக்க உள்ளோம்.
இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

