ADDED : ஜன 31, 2025 12:08 AM

மூணாறு; மூணாறு பகுதியில் காட்டு தீயை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மூணாறில் குளிர் காலம் முடிவுக்கு வரும் தருவாயில் பிப்ரவரி, மார்ச்சில் காட்டு தீ அதிகம் பரவும். தீயணைப்பு, வனத்துறையினருக்கு பணிகள் அதிகரிக்கும். அதனை தவிர்க்கும் வகையில் காட்டு தீயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். காட்டு தீயை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு கோடுகள் அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் ஈடுபடுவார்கள்.
அதன்படி காட்டு தீயை தடுக்க தடுப்பு கோடுகள் அமைத்து புல்மேடுகளில் தீவைத்து காட்டு தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். இரவிகுளம் தேசிய பூங்காவில் தென்னிந்தியாவின் உயரமான ஆனமுடி சிகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் தீ வைத்து கண்காணித்தனர்.
இரவிகுளம் தேசிய பூங்காவில் வரையாடுகளின் பிரசவம் துவங்கிய நிலையில், தீ தடுப்பு நடவடிக்கை அவற்றை பாதுகாக்க மிகவும் உதவியாக அமைந்தது. ைலன்ட்வாலி ரோடு, மாட்டுபட்டி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பற்றிய காட்டு தீயை தீயணைப்புதுறையினர் அணைத்தனர்.