தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/விமானப்படை முன்னாள் தளபதி பா.ஜ.,வில் இணைந்தார்

விமானப்படை முன்னாள் தளபதி பா.ஜ.,வில் இணைந்தார்

விமானப்படை முன்னாள் தளபதி பா.ஜ.,வில் இணைந்தார்


ADDED : மார் 24, 2024 05:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 05:47 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: விமானப்படை முன்னாள் தளபதி பதாரியா பா.ஜ.,வில் இணைந்தார்.

கடந்த 2019 செப்., முதல் 2021 செப்., வரை விமானப்படை தளபதியாக இருந்தவர் ஆர்கேஎஸ் பதாரியா. 36 ஆண்டுகள் விமானப்படையில் பணியாற்றிய அவர், பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பொதுச்செயலாளர் வினோத் தாவ்தே முன்னிலையில், பதாரியா பா.ஜ.,வில் இணைந்தார். அவர் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், நாட்டை கட்டமைக்க எனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கிய கட்சி தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., ஆட்சியின் கீழ் விமானப்படையில் பணியாற்றியது சிறப்பான தருணம். ஆயுதப்படையை நவீனமாக்கவும், தன்னிறைவு பெற செய்யவும், அரசு எடுத்த நடவடிக்கைள் மூலம் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிறகு அவர் பா.ஜ., தேசியத் தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us