முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா காலமானார்!
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா காலமானார்!
ADDED : பிப் 01, 2025 03:35 PM

புதுடில்லி: முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா, 79, உடல் நலக்குறைவால் டில்லி மருத்துவமனையில் காலமானார்.
நவீன் சாவ்லா கடந்த 2005-மே மாதம் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார், ஏப்ரல் 2009ல் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி உயர்வு பெற்றார். அவர் ஜூலை 2010ல் பதவி விலகினார் 1969ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்த இவர், பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்.
அவரது பதவிக்காலத்தில் 2009ல் லோக்சபா பொதுத் தேர்தலையும் ஏழு மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தினார்.
மூன்றாம் பாலின வாக்காளர்கள் 'ஆண்' அல்லது 'பெண்' என்று வாக்களிக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பதிலாக 'மற்றவர்கள்' என்ற புதிய பிரிவில் வாக்களிக்க விருப்பம் தெரிவிக்க அனுமதிப்பது உட்பட பல சீர்திருத்தங்கள் அவரது பதவிக்காலத்தில் செய்யப்பட்டன.
தனது தனிப்பட்ட வாழ்க்கையில், சாவ்லா அன்னை தெரசாவின் தீவிர பற்றாளராக இருந்தார். அவரது வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட சுயசரிதையை எழுதினார். அவர் எழுதிய 'அன்னை தெரசா' என்ற புத்தகம் 1992ல் வெளியிடப்பட்டது.