sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

/

அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்

13


ADDED : ஜூலை 07, 2025 08:30 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 08:30 PM

13


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'பெட்டிகள் பேக் செய்யப்பட்டு விட்டன. விரைவில் அதிகாரபூர்வ இல்லத்தில்இருந்து வெளியேற உள்ளேன்,' என்று சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த சந்திரசூட், கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார். 6 மாதங்களுக்கு மேலாகியும் அவர் இன்னும் அரசு பங்களாவை காலி செய்யாமல் இருப்பதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட் செயலகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. 'முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவின் அனுமதி மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இருப்பினும், பங்களாவைவிட்டு அவர் காலி செய்யவில்லை. ஆகையால், எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவில் இருந்து சந்திரசூட்டை வெளியேற வைத்து, பங்களாவை ஒப்படைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறியதாவது:

நாங்கள் உண்மையில் எங்களது பெட்டி,படுக்கைகளை பேக் செய்துவிட்டோம். அனைத்து பொருட்களும் முழுமையாக பேக் செய்யப்பட்டுள்ளன. சில சாமான்கள் ஏற்கனவே புதிய வீட்டிற்குச் சென்றுவிட்டன, சில இங்கே ஸ்டோர்ரூமில் வைக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 8, 2024 அன்று தனது அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெற்ற எனக்கு, அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் அனுப்பிய கடிதம் அனுப்பியது.

அதற்கு பதிலளித்து நான் எழுதிய கடிதம் எழுதி விட்டேன். இந்த பிரச்னையால் எனக்கு வருத்தம் தான்.

எனது மகள்கள் பிரியங்கா மற்றும் மஹி இருவரும் மாற்றுத்திறன் கொண்ட சிறப்பு குழந்தைகள். அவர்களுக்கு சிறப்பு தேவைகள் உள்ளன. அவர்களுக்கு ஏற்றவாறு வீடு தேவைப்படுகிறது. அதை என்னால் மட்டுமே உணரமுடியும். எப்படி உணர்கிறேன் என்று நான் உங்களுக்கு தெரிவிக்க இயலாது.

நான் உங்களுக்கு குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவென்றால், மகள்கள் இருவருக்கும் அரிதான மரபணு கோளாறு இருப்பது உங்களுக்கு தெரியும். சாதாரண வீட்டில் கூட உயர்தர சுகாதாரம் ஆகியவற்றை பராமரிக்கிறோம். இவர்களை கவனித்துக்கொள்ள ஒரு சிறப்பு செவிலியர் எங்களுடன் உள்ளார். இந்நிலையில் வீட்டை காலி செய்ய சில வாரங்கள் கூட ஆகலாம். புதிய வீடு தயாராகி வருகிறது. விரைவில் அங்கு சென்று விடுவேன்.

இவ்வாறு சந்திரசூட் கூறினார்.






      Dinamalar
      Follow us