முன்னாள் டில்லி காங்., தலைவர் பா.ஜ.,வில் இணைந்தார்
முன்னாள் டில்லி காங்., தலைவர் பா.ஜ.,வில் இணைந்தார்
ADDED : மே 04, 2024 04:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணியில் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி காங்., தலைவர் பதவியை ராஜினாமா செய்த அர்விந்தர் சிங் லவ்லி பா.ஜ.,வில் இணைந்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி. இவர் டில்லி காங்., தலைவர் ஆக பதவி வகித்தார். அவரது விருப்பத்திற்கு எதிராக ஆம் ஆத்மியுடன் கட்சி தலைமை கூட்டணி அமைத்ததை விரும்பாமல், தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அர்விந்தர் சிங் லவ்லி, டில்லியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,க்களான ராஜ் குமார் சவுகான், நசீப் சிங், நீரஜ் பசோயா மற்றும் இளைஞர் காங்., முன்னாள் தலைவர் அமித் மாலிக் ஆகியோர் பா.ஜ.,வில் இணைந்தனர்.