பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி காலமானார்
பீஹார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி காலமானார்
UPDATED : மே 13, 2024 10:50 PM
ADDED : மே 13, 2024 10:44 PM

புதுடில்லி: பீஹார் முன்னாள் துணை முதல்வரும் பா.ஜ.வைச் சேர்ந்தவருமான சுஷில்குமார் மோடி ,72 இன்று காலமானார்.
இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்கான சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலமானார். பா.ஜ.வைச் சேர்ந்த இவர், கடந்த 2005 முதல் 2013வரையும்,பின்னர் 2017 - 2020ம் ஆண்டுகளில் நிதீஷ்குமார் முதல்வராக இருந்த போது துணை முதல்வராக பதவி வகித்தார்.தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து டில்லியில் புறு்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று இரவு சுசில் மோடி காலமானார். நாளை(மே-14) அவரது சொந்த ஊரான பீஹார் மாநிலம் பாட்னா நகரில் உள்ள ராஜேந்திரா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டவரப்பட உள்ளது. மறைந்த அவருக்கு பா.ஜ., தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.