தமிழக மாஜி டி.ஜி.பி., கருணாசாகர் காங்.,கில் ஐக்கியம்
தமிழக மாஜி டி.ஜி.பி., கருணாசாகர் காங்.,கில் ஐக்கியம்
ADDED : மே 01, 2024 06:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாட்னா: தமிழக முன்னாள் டி.ஜி.பி., கருணாசாகர், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியிலிருந்து விலகி இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் கருணாசாகர், 1991ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றி ஒய்வு பெற்றார். ஒய்வுக்கு பின் பீஹாரின் பிரதான எதிர்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் கடந்தாண்டு இணைந்தார்.
இந்நிலையில் இன்று அக்கட்சியிலிருந்து விலகி பீஹார் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்.,கில் இணைந்தார்.