ADDED : ஜூன் 24, 2025 12:23 AM

திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன், 101, மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார்; ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலர் எம்.வி.கோவிந்தன், அச்சுதானந்தனை மருத்துவமனையில் சென்று பார்த்து, மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் பேசிய அவர், ''இப்போதைக்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய நோய் நிபுணர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது,'' என்றார்.