மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை கமிஷனராக ராஜ்குமார் கோயல் தேர்வு
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை கமிஷனராக ராஜ்குமார் கோயல் தேர்வு
UPDATED : டிச 13, 2025 04:45 PM
ADDED : டிச 13, 2025 04:14 PM

புதுடில்லி:முன்னாள் சட்டச் செயலாளரான ராஜ் குமார் கோயல், மத்திய தகவல் ஆணையத்தின் (சிஐசி) அடுத்த தலைமை தகவல் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட உயர்மட்ட தேர்வுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜ் குமார் கோயல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவு டிசம்பர் 15 ஆம் வழங்கப்படுகிறது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் ராஜ் குமார் கோயல் பதவியேற்பு உறுதிமொழி ஏற்பார். இவருடன், மேலும் 8 தகவல் கமிஷனர்கள் நியமிக்கப்பட உள்ளனர், இதற்கு முன் ஹீராலால் சமாரியா தலைமை தகவல் ஆணையராக இருந்தார், அவர் செப்டம்பர் 13 அன்று ஓய்வு பெற்றார். இதனையடுத்து தலைமை தகவல் கமிஷனராகிறார் ராஜ்குமார் கோயல்.
கோயல், 1990ம் ஆண்டு அருணாச்சல பிரதேசம் -கோவா-மிசோரம்- யூனியன் பிரதேசங்கள்) பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மைத் துறையின் செயலாளர் ஆக பொறுப்பு வகித்தார். மே 2024 இல், சட்ட அமைச்சகத்தின் நீதித் துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
மத்திய அரசு மற்றும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டிலும் பல முக்கிய நிர்வாகப் பதவிகளை வகித்துள்ளார்.

