முன்னாள் மவோயிஸ்ட்டுக்கு பாது காவலர் பணி: ஒடிசாவில் நம்பிக்கை ஏற்படுத்திய புதுவாழ்க்கை
முன்னாள் மவோயிஸ்ட்டுக்கு பாது காவலர் பணி: ஒடிசாவில் நம்பிக்கை ஏற்படுத்திய புதுவாழ்க்கை
ADDED : அக் 29, 2025 07:53 PM

புவனேஸ்வர்: ஒடிசாவில் ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் மாவோயிஸ்ட், சரண் அடைந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பாதுகாவலராக பணியாற்றுகிறார்.
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் மாவோயிஸ்ட் தனஞ்சய் கோபே (சுதிர் என அழைக்கப்படும்) 14 முதல் 15 ஆண்டுகளாக மாவோயி
ஸ்டாக செயல்பட்டார்.கும்மா பகுதி குழுவின் பிரிவு குழு உறுப்பினராக இருந்த அவர், 2009 இல் கலிமேலா பகுதியின் தீவிர உறுப்பினராக இருந்தார்.
அவரது குற்றவியல் செயல்பாட்டில்பல உயர்மட்ட கொலை மற்றும் தீ வைப்பு வழக்குகள் அடங்கும்.இந்நிலையில் தேடப்படும் நபராக இருந்த அவருக்கு அரசு,
ரூ.5 லட்சம் சன்மானம் அறிவித்திருந்தது.இதனையடுத்து தனஞ்சய் கோபே கடந்த 6 ஆறு ஆண்டுகளுக்கு முன்பு(2019)பிப்ரவரி 2019 இல் கோராபுட் காவல்துறையின்
தென்மேற்கு ரேஞ்ச் டிஐஜி ஹிமான்ஷு லால் முன் தனது ஆயுதங்களை ஒப்படைத்து
சரணடைந்தார்.
அவர் இப்போது மல்கன்கிரி ரத்த வங்கியில் பாதுகாவலராகப் பணியாற்றுகிறார், ஒரு காலத்தில் அவர் எதிர்த்த அதே சமூகத்திற்கு பாதுகாப்பை வழங்குகிறார்.இதற்கு முன்னர், இதே போலபாலிமேலா பகுதியைச் சேர்ந்த மற்றொரு முன்னாள் மாவோயிஸ்டான ராமா மட்காமி (அல்லது தினேஷ்)கடந்த 2015 ல் சரணடைந்து இப்போது மல்கன்கிரி மருத்துவமனையில் இதேபோன்ற பாதுகாப்புப் பதவியில் உள்ளார்.
தற்போது இருவரும் தங்கள் புதிய வாழ்க்கையில் தங்கள் ஆழ்ந்த திருப்தியை வெளிப்படுத்தினர். இது போல் மற்ற மாவோயிஸ்டுகளும் சரண் அடைந்து புது வாழ்க்கையை தொடங்க, அழைப்பு விடுத்துள்ளனர்.

