ADDED : மார் 02, 2024 10:26 PM

பெங்களூரு: ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மனோகர் தாசில்தார், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
ஹாவேரி ஹன்கல் சட்டசபை தொகுதியில், நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர் மனோகர் தாசில்தார். ஐந்து முறை தோல்வியும் கண்டார்.
காங்கிரசில் இருந்த இவர், 2015ல், சித்தராமையா முதல்வராக இருந்தபோது, கலால் மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்.
காங்கிரசில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், ம.ஜ.த.,வில் இணைந்தார். ஆனால், அரசியலில் எழுச்சி காண முடியவில்லை.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை முயற்சியால், ம.ஜ.த.,வில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைய ஒப்புக் கொண்டார்.
பெங்களூரு மல்லேஸ்வரம் பா.ஜ., அலுவலகத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக் முன்னிலையில், மனோகர் தாசில்தார், நேற்று பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு கட்சிக் கொடி வழங்கி, மாநில தலைவர் விஜயேந்திரா வரவேற்றார்.
பின், அவர் கூறியதாவது:
மனோகர் தாசில்தார், மக்களுடன் இணைந்து செயல்படும் தலைவர். ஹாவேரியில் செல்வாக்கு மிக்க தலைவராகதிகழ்கிறார்.
அவருக்கு என்று தனி ஓட்டு வங்கி உண்டு. அன்பு காட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
அவர் வருகையால், ஹாவேரியில் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
