மஹா.,வில் போதை பார்ட்டி 'மாஜி' அமைச்சர் மருமகன் கைது
மஹா.,வில் போதை பார்ட்டி 'மாஜி' அமைச்சர் மருமகன் கைது
ADDED : ஜூலை 27, 2025 11:48 PM
புனே: மஹாராஷ்டிராவின் புனே நகரில் நேற்று அதிகாலை நடந்த போதை பார்ட்டியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஏக்நாத் காட்சேவின் மருமகன் பிரஞ்ஜால் கேவல்கர் உள்ளிட்ட ஏழு பேர் சிக்கினர்.
மஹாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள கராடி பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் போதை பார்ட்டி நடப்பதாக புனே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று அதிகாலை 3:00 மணியளவில் அங்கு விரைந்து சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த கஞ்சா, மதுபானங்கள், ஹூக்கா போன்ற போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு போதை பார்ட்டியில் பங்கேற்ற ஐந்து ஆண்கள், இரண்டு பெண்கள் போலீசாரிடம் சிக்கினர்.
விசாரணையில், பிடிபட்ட பிரஞ்ஜால் கேவல்கர், மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவின் மூத்த தலைவருமான ஏக்நாத் காட்சேயின் மகள் ரோகிணியின் கணவர் ஆவார்.

