ஸ்ரீராமுலுவை எதிர்த்து போட்டி முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு
ஸ்ரீராமுலுவை எதிர்த்து போட்டி முன்னாள் எம்.எல்.ஏ., அறிவிப்பு
ADDED : மார் 18, 2024 06:17 AM
சித்ரதுர்கா : ''என்னுடன் கலந்து ஆலோசிக்காமல், ஸ்ரீராமுலுவுக்கு பல்லாரி தொகுதியில் பா.ஜ., சீட் கொடுத்துள்ளனர்,'' என அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., திப்பேசாமி தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் கூறியதாவது:
பா.ஜ.,வுக்காக உழைத்த நான், சித்ரதுர்கா, மொல்கால்மூரு சட்டசபை தொகுதியில் 'சீட்' எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு சீட் கை நழுவ செய்தனர்.
அப்போது ஸ்ரீராமுலு எனக்கு, பல வாக்குறுதிகளை அளித்தார். இப்போது அதை மறந்து விட்டார். எனவே பல்லாரி லோக்சபா தொகுதியில், அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளராக களமிறங்க, முடிவு செய்துள்ளேன்.
பல்லாரிக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் போது, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பவோ, பசவராஜ் பொம்மையோ என்னுடன் ஆலோசிக்கவில்லை. சித்ரதுர்கா தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்யும் போதாவது, என் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, வேண்டியும் பலனில்லை. எனவே பல்லாரியில், சுயேச்சையாக களமிறங்க தயாராகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

