தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மாஜி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் 'அட்மிட்'

 மாஜி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் 'அட்மிட்'

 மாஜி துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் 'அட்மிட்'


ADDED : ஜன 13, 2026 12:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 13, 2026 12:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், 74, சில நாட்களுக்கு முன் குளியலறையில் இருமுறை மயக்கமடைந்ததை அடுத்து, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக்தீப் தன்கர், கடந்த ஆண்டு ஜூலை 21ல் உடல்நல பிரச்னை காரணமாக திடீரென தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் பொது நிகழ்ச்சிகளில் அதிக அளவில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி வீட்டில் உள்ள குளியலறையில் இருமுறை அவர் மயக்கி விழுந்தார். இதனால் சிகிச்சைக்காக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று சென்றார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உள்ளிட்ட அவசியமான ஆய்வக பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதால், மருத்துவமனையில் சேர அறிவுறுத்தினர். அதன்படி அவர் நேற்று அட்மிட் ஆனார். உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us