ஹரியானவில் மூன்று சுயேட்சைகள் விலகல் : முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு நெருக்கடி?
ஹரியானவில் மூன்று சுயேட்சைகள் விலகல் : முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு நெருக்கடி?
UPDATED : மே 07, 2024 07:04 PM
ADDED : மே 07, 2024 06:57 PM

சண்டிகர்: அரியானாவில் மூன்று சுயேட்சைகள் ஆதரவை விலக்கி கொள்ள முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து அங்கு பா.ஜ., முதல்வர் நயாப் சைனி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் சட்டசபை தேர்தலில் மொத்தம் 90 தொகுதிகளில் பா.ஜ., 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்பதால், 10 எம்எல்ஏக்களைக் கொண்ட ஜனநாயக ஜனதா கட்சி கூட்டணியை உருவாக்கி பா.ஜ., ஹரியானாவில் ஆட்சி அமைத்தது. பா.ஜ.,வின் மனோகர் லால் கட்டார் முதல்வராக பதவியேற்றார்.
இவர் கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தையடுத்து ஹரியானா மாநில பா.ஜ., தலைவர் நயாப் சிங் சைனி கடந்த மார்ச் மாதம் முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று (07.05.2024) அரியானா அரசியலில் திடீர் திருப்பமாக மூன்று சுயேட்சைகள் பா.ஜ.,வுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.