ஒரே குடும்பத்தின் நான்கு பேர் விபத்தில் உயிரிழப்பு
ஒரே குடும்பத்தின் நான்கு பேர் விபத்தில் உயிரிழப்பு
ADDED : செப் 30, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுப்பி : பைக் மீது, மினி லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
உடுப்பி கார்கலாவின் நல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ஆச்சார்யா, 36. இவரது மனைவி மீனாட்சி, 32. தம்பதிக்கு சுமிக்ஷா, 7, சுஷ்மிதா, 5, என்ற மகள்களும், சுஷாந்த், 2, என்ற மகனும் உள்ளனர்.
தம்பதி, தங்கள் குழந்தைகளுடன், வேனுாருக்கு வந்திருந்தனர். இங்கிருந்து நேற்று மதியம் பைக்கில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கார்கலா - தர்மஸ்தலா நெடுஞ்சாலையின், ஹொஸ்மாரு பாஜிகுட்டே அருகில் சென்றபோது, பைக் மீது மினி லாரி மோதியது. இதில் தந்தையும், மூன்று பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
மீனாட்சி பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கார்கலா போலீசார் விசாரிக்கின்றனர்.