ADDED : ஏப் 03, 2026 03:36 PM

புதுடில்லி:காலாவதியான பொருட்கள் மற்றும் குளிர் பானங்களை ரிபேக்கிங் செய்து, அவற்றை குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனை செய்து வந்த கும்பலில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துவாரகாவில் ஒரு கிடங்கில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுடன் போலீசார் திடீர் சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது அந்த கிடங்கில் ஏராளமான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து பார்த்த போது, அந்த பொருட்கள் காலாவதியானவையாக இருந்தன.
அவ்வாறு, 3,000த்திற்கும் மேற்பட்ட கேன்களில் இருந்த குளிர் பானங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காலாவதியான அந்த பொருட்களை, வேறு பேக்கிங் செய்து, சந்தைக்கு அனுப்பியதாக கமல் முட்கில், 56, சிவம் சிங், 27, லோகேஷ் குமார், 35, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் நீண்ட காலமாக, இந்த முறைகேடான செயலில் அவர்கள் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கிருந்த காலாவதியான பொருட்களை அள்ளிச் சென்ற அதிகாரிகள், அவற்றை பாதுகாப்பாக அழித்தனர்.
*
