
தற்போது ஒரு புதிய சவால் எழுந்துள்ளது. தேர்தல்களில் வாக்காளர் பட்டியல்களில் முறைகேடு பெரிய அளவில் நடக்கிறது. இது குறித்து ராகுல் லோக்சபாவில் கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் ஆதரவாளர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன.இந்த மோசடியை தடுக்க வேண்டும்.
மல்லிகார்ஜுன கார்கே
தலைவர், காங்கிரஸ்
குடிக்கவே செய்யலாம்!
திரிவேணி சங்கமத்தில் உள்ள நீர், அசுத்தமானது அல்ல. இந்த நீர் நீராட மட்டுமல்ல, குடிப்பதற்கும் ஏற்றது. இந்த நீரை மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதுவரை 56 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடி உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை சிலர் அவமதிக்கின்றனர்.
யோகி ஆதித்யநாத்
உ.பி., முதல்வர், பா.ஜ.,
தினம் ஒரு மரக்கன்று!
நான் கடந்த 2021 பிப்., 19ல் தினம் ஒரு மரக்கன்று நடுவது என உறுதி எடுத்தேன். தற்போது அதன் நான்காம் ஆண்டை நிறைவு செய்துள்ளேன். சுற்றுச்சூழலைக் காப்பதற்கும், மண் அரிப்பைத் தடுப்பதற்கும், நீராதாரத்திற்கும் மரங்கள் நடுவது மிகவும் முக்கியமானது. இந்த உறுதிமொழி இப்போது மக்கள் இயக்கமாக மாறி வருகிறது.
சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய அமைச்சர், பா.ஜ.,

