தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இலவச குடிநீர் பரிசோதனை மையம் நொய்டாவில் 14ம் தேதி துவக்கம்

 இலவச குடிநீர் பரிசோதனை மையம் நொய்டாவில் 14ம் தேதி துவக்கம்

 இலவச குடிநீர் பரிசோதனை மையம் நொய்டாவில் 14ம் தேதி துவக்கம்


ADDED : ஜன 31, 2026 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 02:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இலவச குடிநீர் தரப் பரிசோதனை மையத்தை சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனம் நொய்டாவில் துவக்க முடிவு செய்துள்ளது. டில்லி, இந்துார், நொய்டா, போபால் மற்றும் ஆமதாபாத் நகரங்களில் மாசு நிறைந்த குடிநீரால் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதைத் தொடர்ந்து, நொய்டா 66-ல் அமைந்துள்ள, 'எர்த் வாரியர்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், இலவச குடிநீர் தரப்பரிசோதனை மையத்தை வரும், 14ம் தேதி துவக்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, எர்த் வாரியர் நிறுவனர் பங்கஜ் குமார் கூறியதாவது:

குடிநீர் பரிசோதனை மையத்தில், பொது மக்கள் கொண்டு வரும் குடிநீரை பரிசோதனை செய்து அறிக்கை அளிக்கப்படும். இந்த ஆய்வகத்தில் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் பொது நீர் தரத் தகவல் என்ற அமைப்பும் அறிமுகம் செய்யப்படும். இந்த டிஜிட்டல் தளம் நீர் தர அறிக்கைகளை நிகழ்நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கும். முன்கூட்டியே எச்சரிக்கை செய்யப்படும்.

இந்த ஆய்வகம் இந்திய தர நிர்ணய விதிமுறைப்படி, 10 அத்தியாவசிய நீர் தரங்களை பகுப்பாய்வு செய்யும். மேலும், விரிவான மதிப்பீடுகள் செய்ய எதிர்காலத்தில் வரம்பு விரிவுபடுத்தப்படும்.

ஆய்வு முடிவுகளின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்ய, மாதிரி சேகரிப்பு மற்றும் பரிசோதனைகள் தேசிய சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான அங்கீகார வாரிய வழிகாட்டுதல்படி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us