sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 ஹோலி பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர்: முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

/

 ஹோலி பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர்: முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

 ஹோலி பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர்: முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

 ஹோலி பண்டிகைக்கு இலவச காஸ் சிலிண்டர்: முதல்வர் ரேகா குப்தா அறிவிப்பு

1


UPDATED : பிப் 04, 2026 08:18 AM

ADDED : பிப் 04, 2026 04:34 AM

Google News

UPDATED : பிப் 04, 2026 08:18 AM ADDED : பிப் 04, 2026 04:34 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''தகுதியுள்ள ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு, ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்கப்படும்,'' என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.

முதல்வர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. டில்லி மாநகரின் வளர்ச்சிப் பணிகள், காற்று மாசு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் அறிக்கையில் கூறியபடி, ஹோலி பண்டிகை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்கு, ரேஷன் கார்டுதாரருக்கு இலவசமாக காஸ் சிலிண்டர் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.242 கோடி தகுதியுள்ள ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத்துக்கு, ஒரு காஸ் சிலிண்டரின் விலையான, 853- ரூபாயை, பயனாளிகள் வங்கிக் கணக்கில் டில்லி அரசு செலுத்தும். குழாய் வழியாக இயற்கை எரிவாயு இணைப்பு வைத்துள்ள தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரருக்கும் இந்த தி ட்டம் பொருந்தும்.

ஹோலி பண்டிகைக்கு முன்பே இந்தத் தொகை பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்துக்காக, 242 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர்கள் மஞ்ஜிந்தர் சிங் சிர்சா, கபில் மிஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.

சுத்திகரிப்பு நிலையம் முதல்வர் ரேகா குப்தா தலைமையில், டில்லி ஜல் போர்டு ஆலோசனைக் கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் ரேகா கூறியதாவது:

சந்த்ராவல் பகுதியில், 105 மில்லியன் கேலன் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம், 2012-ம் ஆண்டு ஆம் ஆத்மி ஆட்சியில் அங்கீகரிக்கப்பட்டது.

ஆனால், திட்டத்தை விரைந்து செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டனர். எனவே, வரும் கோடைகாலத்தை சமா ளிக்க சந்த்ராவல் நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்த நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், குடிநீர் வினியோகம் மேம்படும். ஆரம்பத்தில், 599 கோடி மதிப்பில் துவக்கப்பட்ட இந்தத் திட்டம், முந்தைய ஆம் ஆத்மி ஆட்சிக் காலத்தில் மீண்டும் மீண்டும் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்ட தா லும், ஜப் பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததாலும் முடங்கியது. இந்தத் தாமதங்கள் காரணமாக திட்டச் செலவு, 400 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்த நிலையத்தில் இருந்து குடிநீர் சப்ளைக்காக, 1,331 கோடி ரூபாய் செலவில் குடிநீர் குழாய்கள் மாற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது.

மேற்கு சந்த்ராவல், கிழக்கு சந்த்ராவல் மற்றும் மத்திய சந்த்ராவல் ஆகிய மூன்று வினியோகத் திட்டங்களில், இரண்டு திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கரோல் பாக், சிவில் லைன்ஸ், கமலா நகர், படேல் நகர், சாஸ்திரி நகர், நரைனா, புதிய ராஜேந்திர நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இந்த திட்டத்தால் பலனடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us