ADDED : மே 19, 2025 03:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமராவதி: ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், பா.ஜ., ஜனசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம், இலவச சிலிண்டர், முதியோர் ஊக்கத்தொகை உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அளித்திருந்தார்.
பதவியேற்ற பின் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றி வருகிறார்.
இதன்படி, ஆந்திர போக்குவரத்து கழகத்தின் கீழ் உள்ள 11,216 பஸ்களில், சுதந்திர தினமான, வரும் ஆகஸ்ட் 15 முதல், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார்.