தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை
தனியார் மருத்துவமனைகளில் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை
ADDED : மார் 06, 2026 01:41 AM

புதுடில்லி, ''பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு, தனியார் மருத்துவமனைகளில் முன்னுரிமை அடிப்படையில் சிகிச்சை அளிப்பதை, பொது சுகாதார பணிகள் இயக்குனரகம் உறுதி செய்ய வேண்டும்,'' என, டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ்குமார் சிங் கூறினார்.
டில்லியில் உள்ள, 56 மருத்துவமனைகளில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க சட்டம் உள்ளது. அந்த வகையில், கடந்த, 2024 முதல், 2026ம் ஆண்டு ஜனவரி வரை, 7.23 லட்சம் நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அதுபோல, 41,900 நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.
இந்நிலையில், டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பங்கஜ்குமார் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டில்லி அரசு, ஏழைகளுக்கு, அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்துள்ளது.
அந்த வகையில், பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க, பொது சுகாதார பணிகள் இயக்குனரகம் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

