உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 16, 2026 02:02 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி, வட மேற்கு டில்லியை சேர்ந்த பிரபல கொள்ளையனின், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை போலீசார் முடக்கியுள்ளனர். ஜிதேந்தர் என்ற ஜீத்து என்ற கொள்ளையர் மீது பல வழக்குகள் உள்ளன. இவரின் மனைவி ஜோதி. இவர்கள் இருவருக்கும் சொந்தமான, பங்கர் காலனியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட சொத்துகளை போலீசார் நேற்று முடக்கினர். இவற்றின் மதிப்பு, 5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இதன் மூலம், இந்த கொள்ளை கும்பல் தலைவனின் நிதி ஆதாரங்களை அழித்து விட்டதாக, டில்லி போலீசார் கூறியுள்ளனர்.
