sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் முதல் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 05)!

/

ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் முதல் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 05)!

ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் முதல் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 05)!

ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் முதல் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 05)!

1


ADDED : மார் 05, 2026 08:40 AM

Google News

1

ADDED : மார் 05, 2026 08:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 05) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் இன்று இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி நடைபெறும் நிலையில், இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்புன் காத்திருக்கின்றனர்.

* இந்தியா வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் உடன் டில்லியில் இன்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது.

* ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசிநாள். இன்றைக்குள் தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்களை தேர்தல் கமிஷன் நாளை பரிசீலிக்கிறது.

* நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்த பின், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஒரு கோடியே 89 லட்சம் வாக்காளர்கள், 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுக்க உள்ளனர். Gen Z தலைமுறையினரின் போராட்டத்தால் ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடக்கிறது.

* சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

* சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையே 5 கி.மீ. தூரத்திற்கு அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகிறது. 5 கி.மீ.தூரத்திற்கு இன்று மதியம் 2 மணி முதல் 5.30 மணி வரை இந்த சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

* ராஜ்யசபா தேர்தல் வேட்பாளராக பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று (மார்ச் 5) மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜ தேசிய தலைவர் நிதின் நபினும் இன்று மனுத்தாக்கல் செய்கிறார்.






      Dinamalar
      Follow us