விவசாயிகளின் இயக்கத்திற்கு முழு ஆதரவு: கார்கே, ராகுல் உறுதி
விவசாயிகளின் இயக்கத்திற்கு முழு ஆதரவு: கார்கே, ராகுல் உறுதி
UPDATED : பிப் 13, 2024 04:38 PM
ADDED : பிப் 13, 2024 02:36 PM

புதுடில்லி: 'விவசாயிகளின் இயக்கத்திற்கு எங்களின் முழு ஆதரவு உண்டு' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து கார்கே எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது: முள்வேலி, ட்ரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் குரலை ஒடுக்கும் பா.ஜ., அரசு. சமீபத்தில் மத்திய அரசு விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொல்லி அவதூறு செய்து 750 விவசாயிகளின் உயிரைப் பறித்தது நினைவிருக்கிறதா?. 10 ஆண்டுகளில், நாட்டின் உணவு வழங்குனர்களுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளை பா.ஜ., அரசு மீறியுள்ளது.
விவசாயிகளின் வருமானம் 2022க்குள் இரட்டிப்பாகும். எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையின்படி, உள்ளீட்டு செலவு மற்றும் 50 சதவீத குறைந்தபட்ச ஆதார விலை. விவசாயிகளின் இயக்கத்திற்கு எங்களின் முழு ஆதரவு உண்டு.பயப்பட மாட்டோம். தலைவணங்க மாட்டோம்!. இவ்வாறு அந்த அறிக்கையில் கார்கே கூறியுள்ளார்.